Latestமலேசியா

தெலுக் இந்தானில் பள்ளத்தில் விழுந்த வாகனம்; ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்

தெலுக் இந்தான், ஆகஸ்ட் 6 – தெலுக் இந்தான், குவாலா பிக்காமில் (Kuala Bikam) நடந்த விபத்து ஒன்றில் வாகனம் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியதில், ஆடவர்‌ ஒருவர் கருகி மாண்டார்.

நேற்று இரவு 10.35 வாக்கில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில், Honda City வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 98 விழுக்காடு தீயில் அழிந்தது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த பேராக் மற்றும் பீடோர் (Bidor) மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இதனிடையே, வாகனத்தில் கருகி மாண்டவரின் பாலினம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக போலிசாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அகமது (Sabarodzi Nor Ahmad) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!