Latestமலேசியா

தெலுக் இந்தானில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பொது மண்டபம் தீயில் எரிந்தது தொடர்பில் இரு சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், நவ 22 – பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்பட்ட வான வேடிக்கையினால் தெலுக் இந்தான்   நகரான்மைக் கழகத்திற்கு சொந்தமான  பொது மண்டபத்தை   எரித்தது மற்றும் வெடிப்பு பொருளை   சட்டவிரோதமாக வைத்திருந்ததாக  இரண்டு  சகோதரர்கள் மீது  இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.  

நீதிபதி  Norhamizah Shaiffudin முன்னிலையில்   குற்றச்சாட்டு  வாசிக்கப்பட்டபோது  19 வயதுடைய   JM ஜேசன் மறுத்தார். வேலையில்லாதவரான அவர் வான வெடியை பயன்படுத்தி   தீய நோக்கத்தோடு  நவம்பர் 11ஆம்தேதி இரவு மணி 11,29 அளவில்  ஜாலான் ராஜாவுக்கு அருகேயுள்ள   Arena  Squre  மண்டபத்தை  எரிந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டார்.   

தண்டனைச் சட்டத்தின்   436 ஆவது விதியின்  கீழ்  கொண்டுவரப்பட்ட  இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால்  அந்த இளைஞருக்கு  20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.   மூவாயிரம் ரிங்கிட் ஜாமினில்  ஜேசன்  விடுவிக்கப்பட்டார்.  

இதனிடையே  அவரது மற்றொரு சகோதரரான   24 வயதுடைய  JM Steven   வெடி பொருட்கள்  வைத்திருந்ததாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை  மறுத்தார்.  நவம்பர் 11ஆம்தேதி  இரவு  8.30 மணியளவில்  அவர் இக்குற்றத்தை புரிந்ததாக  மாஜிஸ்திரேட் Naidatul Athirah Azman  முன்னிலையில்  குற்றஞ்சாட்டப்பட்டது. 

லோரி ஓட்டுனரான  அந்த இளைஞர்   3,500 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அந்த இரு சகோதரர்களுக்கு எதிரான  குற்றச்சாட்டு  டிசம்பர் 20 ஆம் தேதி  மீண்டும்  மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!