Latestசினிமா

தெலுங்கானாவில் திரையரங்கை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்; வக்கீல் சாப் திரைப்படம் நிறுத்தம்

ஹைதரபாத், ஏப் 10- இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிங்க் திரைப்படம் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த இப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உட்பட நடித்திருந்தனர். இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியானது.

தெலுங்கானாவில் ஜகுலம்பா கத்வால் பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் வக்கீல் சாப் திரையிடப்பட்டபோது திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் படம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்கை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரிய கலவரம் ஏற்பட்டபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

திரையரங்கின் கண்ணாடி கதவுகள் உட்பட திரையரங்கின் சொத்துக்களையும் ரசிகர்கள் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதும் பவன் கலயாண் ரசிகள்கள் ஏற்கனவே இதே போன்று ரகளையில் ஈடுபட்டனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!