தெலுங்கானா, ஆகஸ்ட் 28 – இந்தியா, தெலுங்கானாவில், ரயில் தண்டவாளத்திற்கு இடையே கால் சிக்கிக் கொண்டபோது சாதுரியமாகச் சிந்தித்து உயிர் பிழைத்த பெண்ணின் காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, சம்பந்தப்பட்ட பெண்ணின் கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
அதே நேரத்தில் சரக்கு ரயில் ஒன்று அந்த வழியாக வேகமாக வருவதைக் கண்டு, ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அந்த பெண் தமது உடலைக் குறுக்கி தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக் கொண்டதால் ரயில் அவர் மீது மோதாமல் கடந்துச் சென்றது.
பின்னர் சரக்கு ரயில் சென்றவுடன் தண்டவாளத்தில் சிக்கிய தன்னுடைய காலை பத்திரமாக மீட்டு அங்கிருந்து வெளியேறினார்.