கோலாலம்பூர், ஏப் 10 – இன்று தெலுங்கு புத்தாண்டான உகாதியை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெலுங்கு சமூகத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் வெற்றியையும் சுபிட்சத்தையும் கொண்டுவரும் என தமது முகநூல் பதிவில் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அனைத்து மலேசியர்களின் சார்பில் உபாதி சுபகாஞ்சாலுவை தாம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.