Latestமலேசியா

தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழா; அக்டோபர் 5 பண்டார் சௌஜனா மாசா பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 21 – தேசம் ஊடகத்தின் 15 ஆது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விருதளிப்பு விழா கோலாலம்பூர், பண்டார் சௌஜனா, மாசா பல்கலைக்கழக மண்டபத்தில் அக்டோபர் மாதம் 5 ஆம்தேதி மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. ஊடகம், கலைத்துறை, விளையாட்டு , அரசியல் ஆண்டின் சின்னங்கள் மற்றும் வாழ்நாள் சாதனையார் என்று பவ்வேறு பிரிவுகளில் விதுகள் வழங்கப்படவிருப்பதாக தேசம் ஊடகத்தின் ஆசிரியர் குணாளன் மணிம் தெரிவித்தார். ஆண்டுதோறும் சாதனையாளர்களை கௌரவிக்கும் தேசம் ஊடகத்தின் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விருது பெறுவோரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!