கோலாலம்பூர், டிசம்பர்-14, தேசிய சீனியர் கராத்தே அணியின் தலைமைப் பயிற்றுநராக ஆர். ஷர்மேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.
எகிப்தைச் சேர்ந்த Tamer Abdelraouf Mohamed Mourssy விட்டுச் சென்ற இடத்தை ஷர்மேந்திரன் நிரப்புவதாக, MAKAF எனப்படும் மலேசியக் கராத்தே சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மொஹமட் ரஸ்லான் ஷா (Mohd Razlan Shah) அறிவித்தார்.
4 முறை சீ போட்டியில் தங்கம் வென்றவரான ஷர்மேந்திரன், இனி தேசிய முதன்மை அணியை வழிநடத்துவதோடு, தற்போது அவர் தலைமைப் பயிற்றுநராக இருக்கும் back-up எனப்படும் மாற்று அணியையும் தொடர்ந்து கண்காணித்து வருவார்.
எவ்வளவு காலத்திற்கு அவர் அப்பொறுப்பில் இருப்பார் என தெரியவில்லை; ஆனால் 6 மாதங்களில் அவரின் அடைவுநிலையை மதிப்பீடு செய்வோம் என, ரஸ்லான் சொன்னார்.
போதிய அனுபவம் இருப்பதால் அம்முக்கியப் பொறுப்பை ஷர்மேந்திரன் திறம்பட ஆற்றுவார் என ரஸ்லான் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஷர்மேந்திரனுக்குத் துணையாக, எஸ். செந்தில் குமரன், எல்.குணசீலன் உள்ளிட்ட சிலர் துணைப் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.