
புத்ராஜெயா, ஆகஸ்ட்டு 22 – 2023 தேசிய தினக் கொண்டாட்டம் அல்லது அதற்கான முன்னேற்பாடு நடைபெறும் பகுதிகளில், அனுமதியின்றி Dron ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 21-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையில் அந்த தடை அமலில் இருக்குமென, CAAM – மலேசிய பொது வான் போக்குவரத்து அதிகாரத்துவ தரப்பு தெரிவித்தது.
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அரச மலேசிய வான்படைக்குச் சொந்தமான விமானங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவை மீறி, பொதுமக்களுக்கோ, பொது உடமைகளுக்கோ சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் தரப்பினருக்கு எதிராக, 1969-ஆம் ஆண்டு பொது வான் போக்குவரத்து சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31-ஆம் தேதி, “மலேசியா மடானி ; உறுதியான ஒற்றுமையே, நம்பிக்கையை நிறைவேற்றும்” எனும் கருப்பொருளில், தேசிய தினக் கொண்டாட்டம், புத்ராஜெயாவில் நடைபெறும்.