
கோலாலம்பூர், ஆக 20 – இம்மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்திற்கு தனி சின்னம் மற்றும் தனி கருப்பொருளை பயன்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் நிர்வாகத்திலுள்ள 4 மாநிலங்கள் ஆலோசனை தெரிவித்திருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு தொடர்பில் Patriot எனப்படும் விசுவாச இயக்கம் சாடியது. Perlis, Kedah, Kelantan மற்றும் Terengganu ஆகியவை கூட்டரசு அரசாங்கத்திலிருந்து வேறுபட்ட சின்னம் மற்றும் கருப்பொருளை பயன்படுத்தும் என்று வெளியான தகவலை தாம் கடுமையாக கருதுவதாக Patriot-ட்டின் தலைவரான ஓய்வுபெற்ற ராணுவ brigadier-general Arshad Raji தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்கு மாநிலங்களும் மாறுபட்ட சின்னம் மற்றும் கருப்பொருளை பயன்படுத்தும் ஆலோசனையை பெரிக்காத்தான் நேசனல் இளைஞர் பிரிவின் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்திருப்பது , நாட்டில் பின்பற்றப்படும் கூட்டரசு அனுகுமுறை கோட்பாட்டிற்கு எதிரானது என Arshad Raji கூறினார். அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு போக்கை விசுவாச இயக்கம் கடுமையாக சாடுவதாக அவர் தெரிவித்தார்.