
புத்ரா ஜெயா, ஆக 30 – 66 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு வாகன சிறப்பு எண்களுக்கு முன்னதாவும் மற்றும் அதன் பின்னாலும் M என்ற எழுத்துடன் கொண்ட சிறப்பு பதிவு எண்களை JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை ஏல விற்பனையை தொடங்கவிருக்கிறது. நாளை வியாழக்கிழமை தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதிவரை சாலை போக்குவரத்துத்துறையின் JPJ e-Bid செயலியில் சிறப்பு எண் பதிவு எண்களுக்கான ஏல விற்பனையில் பங்கேற்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.
மலேசியாவின் Merdeka தினத்தை குறிக்கும் வகையில் “M ….M” எழுத்தைக் கொண்டு அந்த சிறப்பு பதிவு எண்கள் விற்கப்படும். நடப்பு எண் பட்டையில் எண்களுக்கு முன் உள்ள M எழுத்து மலாக்காவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை குறிக்கும். இதன் காரணத்தினால் எண்களுக்கு கடைசியில் மற்றொரு M எழுத்து சேர்க்கப்பட்டிருப்பதாக நேற்று தமது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Anthony Loke தெரிவித்தார். Golden எனப்படும் தங்க எண்களுக்கான ஏலத்திற்கு குறைந்தபட்ச தொகை ரி.ம 20,000 ஆகும் . கவர்ச்சிகரமான எண்கள் 3,000 ரிங்கிட்டிற்கும் பிரபல எண்கள் 800 ரிங்கிட்டிற்கும் அடுத்தடுத்து வரும் ( Running) எண்கள் 300 ரிங்கிட்டும் ஏலத்திற்கு விற்கப்படும் என அவர் கூறினார்.