Latestமலேசியா

தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்க மகாதீர் பரிந்துரை

கோலாலம்பூர், ஜூன் 10- 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதைப் போன்று National Operation Council NOC எனப்படும் தேசிய நடவடிக்கை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை டாக்டர் மகாதீர் முகமட் இன்று மாட்சிமை தங்கிய பேரரசரிடம் முன்மொழிந்தார். எனினும் தமது இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்று முன்னாள் பிரதமரருமான டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இந்த பரிந்துரை வேண்டாம் என பேரரசர் கூறவில்லை. ஆனால் தேசிய நடவடிக்கை மன்றம் அமைப்பது தொடர்பான பரிந்துரை அரசாங்கத்திடமிருந்து வரவேண்டுமென என்று அவர் கூறியதாக மகாதீர் தெரிவித்தார். இருந்தபோதிலும் இந்த ஆலோசனையை அரசாங்கம் பரிந்துரைக்கும் என்பது சந்தேகமே என்றும் மகாதீர் விவரித்தார்.

தேசிய நடவடிக்கை மன்றத்திற்கு யார் தலைமையேற்பது என்ற விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. அதே வேளையில் அரசாங்கம் விரும்பினால் தமது சேவையை தேசிய நடவடிக்கை மன்றத்திற்கு வழங்க தயாராய் இருப்பதாகவும் மகாதீர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!