
கோலாலம்பூர்,ஆக 31 – தேசிய நல்லிணக்கத்திற்கு நேரம் வந்துவிட்டதாக சிலாங்கூர் மந்திரிபுசார் Amirudin Shari தெரிவித்திருக்கிறார். தேசிய நிலையிலான தலைவர்களும மக்களும் மேற்கொண்டுள்ள தேசிய நல்லிணக்கம் அல்லது சமரச நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என அண்மையில் சிலாங்கூர் மந்திரிபெசாராக இரண்டாவது தடவையாக பதவியேற்ற Amirudin Shari கேட்டுக்கொண்டார்.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாய நடைமுறைகள் மற்றும நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் மக்களின் நேரடி பங்கேற்பு மறுக்கப்பட்ட Sheraon நடவடிக்கையினால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை குறைப்பதற்காக நல்லிணக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேற்றிரவு மாநில நிலையிலான தேசிய தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை ஜனநாயக அரசியல் நடைமுறையில் இனியும் ஒரு பகுதியாக இல்லையென அவர் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில தேர்தல் முடிந்துவிட்டதால் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என Amiruddin Shari கேட்டுக்கொண்டார்.