
கோலாலம்பூர், மே 22 – இவ்வாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நிலையிலான புத்தாக்க விருதை பகாங் ரவுப் , மாமுட் தேசிய தொடக்க பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் கதிரேசன் மூர்த்தி வென்றார். நாடு முழுவதிலும் மாவட்டம், மாநிலம் ரீதியில் பின்தங்கிய மாணவர்களை படிக்கவும், எழுதவும் வைப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இம்மாதம் 16 ஆம் தேதி மலாக்காவில் நடைபெற்ற தேசிய நிலையிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்தின்போது கதிரேசனுக்கு புத்தாக்க விருது வழங்கப்பட்டது. இதற்காக கல்வி அமைச்சர் Fadhilna Sidek கிடமிருந்து மூவாயிரம் ரிங்கிட் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிழை கதிரேசன் பெற்றார்.
காராக் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவரான கதிரேசன் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி பின்னர் ராஜா மெலாவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடிந்த பின்னர் கடந்த எழு ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முதலாம் ஆண்டு மாணவர்ளுக்கு மலாய் மொழியை போதித்துவரும் அவர் முதல் வகுப்பில் சரியாக வாசிக்க முடியாமல் எழுதமுடியால் இருந்த மாணவர்கள் சொந்தமாக படித்து எழுதக்கூடிய வகையில் 8 அணுகுமுறைகளை தாம் கையாண்டதாகவும் இந்த முறை நல்ல பலனை தந்தது என அவர் கூறினார். தமது நோக்கம் எல்லாம் மாணவர்கள் சரியாக எழுதப் படிக்க வேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கியே தமது ஆசிரியர் பணியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த புத்தாக்க விருது என கதிரேசன் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இந்த வேளையில் பெந்தா தோட்ட தமிழ்ப்பள்ளியியில் 5ஆம் வகுப்பில் தாம் கற்பித்த மாணவர் இன்று குடிநுழைவு அதிகாரியாக தேர்ச்சி பெற்று ஜோகூர் பாருவில் பணியை மேற்கொள்வதற்கு சென்றது குறித்தும் கதிரேசன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.