Latest
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவு

கோலாலம்பூர், ஜூன் 28 – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு நிகர லாபமாக 4 கோடியே 82 லட்சத்து 36,159 ரிங்கிட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து கூட்டுறவு கழக உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவு தொகை வழங்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ பா , சகாதேவன் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் 56 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். கூட்டுறவு சங்கத்தின் பல துணை நிறுவனங்கள் மேம்பாட்டுத்துறை ஒப்பந்தங்களின் மூலம் பொருளாதாரத்துறையில் முன்னேற்றத்தை காண்பதற்குரிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சகாதேவன் தெரிவித்தார்.