
கோலாலம்பூர், மே 23 – தேசிய பயிற்சி வாரத்தை முன்னிட்டு இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் தேதிவரை பல்வேறு பயிற்சிகளை மனித வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் HRDF வழங்கி வருகிறது. அனைத்து மலேசியர்களும் இந்த ஒரு வாரத்தில் எதாவது பயிற்சியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மனித வள அமைச்சு தேசிய பயிற்சி வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சிகள் தொடர்பாக மனிதவள பயிற்றுநரான Kanniah Jogulu வழங்கும் விளக்கத்தை இப்போது கேட்போம்.