கோலாலம்பூர், பிப் 15- ஆசிய மகளிர் குழு பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவிருக்கும் மலேசிய மகளிர் பேட்மிண்டன் குழுவின் இரட்டையர் ஆட்டத்தின் விளையாட்டாளரான M.தீனா முரளிதரனுக்கு கோவிட் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்போட்டியில் விளையாட முடியாமல் அவர் தனித்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார். சுகாதார அமைச்சு நிர்ணயித்திருக்கும் வழிகாட்டலுக்கு ஏற்ப Pearly Tan னின் இரட்டையர் ஆட்ட ஜோடியான தீனா தனித்திருக்கும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என மலேசிய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தீனாவுடன் நெருக்கமாக இருந்தார் என்பதால் Pearly Tan னுக்கும் சுய பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கோவிட் தொற்று இல்லையென தெரியவந்தது. தீனா இல்லாத நிலையில் தற்போது மகளிர் இரட்டையர் பிரிவில் Pearly Tan, Valaree Siow வுடன் இரட்டையர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.