Latestமலேசியா

தேசிய மீட்சி திட்டத்தின் கீழ் அரசாங்க செயல்பாட்டிற்கு புதிய வழிகாட்டிகள் – முகமட் சுகி

கோலாலம்பூர், ஜூலை 22 – ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய அரசாங்க அலுவலகங்களில் வேலைக்கு வர வேண்டிய பணியாளர்கள், முகப்பிட சேவைகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பான புதிய வழிகாட்டிகளைக் கொண்ட விவரங்களை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ Mohd Zuki Ali வெளியிட்டார். தேசிய மீட்சி திட்டத்தின் கீழ் அரசாங்க செயல்பாட்டிற்கான வழிகாட்டியாக இந்த அம்சங்கள் கொண்டுள்ளன.

தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதால் அரசாங்க துறையில் அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என துணைப்பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப புதிய வழிகாட்டிகள் அமையும் என Mohd Zuki Ali தெரிவித்தார்.

தேசிய மீட்சிக்கான இரண்டாவது கட்ட திட்டத்தின் கீழ் கூடிய பட்சம் 60 விழுக்காடு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும், எஞ்சிய 40 விழுக்காட்டினர் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என கூறப்பட்டது. முன்களப் பணியாளர்கள், பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் அமலாக்க அதிகாரிகளைத் தவிர்த்து எஞ்சிய 40 விழுக்காட்டினர் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். அரசாங்க முகப்பிட சேவைகளில் 60 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்படும். எனினும் இப்போதைய நிலையில் கூட்டங்கள் நடத்துவதற்கு இன்னமும் அனுமதியில்லை என்று Mohd Zuki விவரித்தார். மூன்றாவது கட்ட மீட்சித் திட்டத்தின்போது அரசு ஊழியர்களில் 80 விழுக்காட்டினல் அலுவலகத்திலிருந்து வேலை செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!