Latestவிளையாட்டு

Euro கிண்ண காற்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ரொமெனியா தகுதி பெற்றன

பாரிஸ், நவ 19 – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Euro கிண்ண காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ரோமேனியா ஆகியவை தகுதி பெற்றன. ஜிப்ரால்டர் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 14- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அயர்லாந்து குடியரசு குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2008ஆம் ஆண்டுக்குப்பிறகு ரோமேனியாவும் இரண்டாவது முறையாக Euro காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. ரோமேனியா 2-1 என்ற கோல் கணக்கில் இஸ்ரேல் அணியை வென்றது. தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1-1 என்ற கோல் கணக்கில் கொசோவோ அணியுடன் சமநிலைக் கண்டபோதிலும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!