Latestமலேசியா

தேசிய முன்னணி உறுப்புக் கட்சியின் தலைவர்களை பேரரசர் இன்று சந்திக்கிறார்

கோலாலம்பூர், ஜூன் 11 – மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா இன்று தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 10 மணிக்குப் பிறகு தேசிய முன்னணியின் தலைவரும் அம்னோவின் தலைவருமான அகமட் ஸாஹிட் ஹமிடியை பேரரசர் சந்தப்பார்.

அதனைத் தொடர்ந்து ம.இ.கா மற்றும் PBS எனப்படும் சபா பெர்சத்து கட்சியின் பிரதிநிதிகள் பேரசரை சந்திப்பார்கள். புதன்கிழமை முதல் எட்டு அரசியல் கட்சியின் தலைவர்களை பேரரசர் சந்தித்துள்ளார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், DAP யின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.

நேற்று பேரரசருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நடத்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நடவடிக்கை மன்றத்தை போன்ற புதிய அதிகார அமைப்பு அல்லது புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பரிந்துரையை முன்மொழிந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!