ஜோகூர் பாரு, மார்ச் 7 – ஜோகூர் மாநிலத் தேர்தலில் , தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற இலக்கு கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
ஜோகூர் தேர்தலில் எளிய பெரும்பான்மை வேண்டாம். முடிந்தால் மூன்றில் இரு பெரும்பான்மையில் வெற்றி பெற்று பலம் பொருந்திய கூட்டணியாக ஜோகூர் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைப்பதை தாம் விரும்புவதாக அவர் கூறினார்.
அம்மாநிலத் தேர்தலில் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.