Latestமலேசியா

தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல்: ம.இ.காவுக்கு 10 எம். பி தொகுதிகள் ஐ.பி.எப், மக்கள் சக்தி கட்சி கிம்மாவுக்கும் தொகுதிகள்

கோலாலம்பூர், நவ 1 – தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்றிரவு புத்ரா உலக வர்த்தக மையத்தில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தபோது ம.இ.கா தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. தேசிய முன்னணியின் முக்கிய உறுப்புக் கட்சிகளில் ஒன்றான ம.இ.கா எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாது என தகவல்கள் வெளியாகின. எனினும் அகமட் ஸாஹிட் ஹமிடி தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவித்தார்.

பாடாங் செராயில் டத்தோ சிவராஜ் சந்திரன் , சுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தாப்பாவில் டத்தோஸ்ரீ எம். சரவணன், தெலுக் இந்தானில் டத்தோ டி. முருகையா, உலு சிலாங்கூரில் டத்தோ டி. மோகன், கோத்தா ராஜாவில் கஜேந்திரன் , கோலா லங்காட்டில் டத்தோ மோகனா முனியாண்டி, போர்ட்டிக்சனில் டத்தோ பி.கமலநாதன், பத்து தொகுதியில் டத்தோ கோகிலன் பிள்ளை , சிகமாட்டில் டான்ஸ்ரீ ராமசாமி ஆகியோர் ம.இ.கா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர தேசிய முன்னணியின் நட்புறவு கட்சிகளான ஐ.பி.எப் தலைவர் டத்தோ லோகநாதன் ஜெலுத்தோங் தொகுதியிலும் , மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ் தனேந்திரன், நிபோங் தெபால் தொகுதியிலும் சைட் இப்ராஹிம் பூச்சோங் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!