Latestமலேசியா

அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்டதாரிகள் – மலேசிய சபா பல்கலைக்கழகம் சாதனை

கோத்தா கினபாலு, டிசம்பர் 12 – கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மலேசிய சபா பல்கலைக்கழகம் அதிகமான பி.எச்.டி எனப்படும் முனைவர் பட்டங்களை வழங்கிய உயர்கல்விக்கூடமாகச் சாதனை புரிந்துள்ளது.

மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேசுகையில், இது பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் பெருமையை சேர்க்கும் ஒரு முக்கியமான சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் 655 பட்டதாரிகளில் 97 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். எஞ்சிய 558 பேர் முதுகலைப் பட்டம் பெறுகிறார்கள்

டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,236 மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!