பெட்டாலிங் ஜெயா, ஆக்ஸ்ட் 26 – பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள, தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் (SJK(T) Ldg Effingham) தேசிய மாதக் கொண்டாட்டத்தின் துவக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பள்ளியின் தலைமையாசிரியர் சிவபாராதி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வரதராஜு ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக இக்கொண்டாட்டம் திறப்பு விழா கண்டது.
இந்நிகழ்ச்சியை வண்ன மயமாக்கும் வகையில் மாணவர்களின் படைப்புகள் அமைந்திருந்தன.
ஆடல், பாடல் என தேசப்பற்றை உருவாக்கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் வடிவேலு கிருஷ்ணன் தெரிவித்தார்.
100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், தற்போது 250 மாணவர்கள் உட்பட 26 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.