
குவாந்தான், மார்ச் 11 – மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா (BNM) அதிகாரியாகவும், நீதிமன்ற பிரதிநிதியாகவும் ஆள்மாராட்டம் செய்த மோசடிக் கும்பலால், ஓய்வுபெற்ற ஒரு பெண் ஒருவர் 100,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
பணமோசடி குற்றாச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி 60 வயதான அந்தப் பெண்ணுக்கு மார்ச் 5ஆம் திகதி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதன் பின்னர் ஏமாந்த அப்பெண் தன் சேமிப்பை அறிவிக்க, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்த கட்டளையிடப்பட்டதாக பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
பயந்து ஏமாந்த அப்பெண், மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை நான்கு முறை மொத்தம் 100,000 ரிங்கிட்டை இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக யாஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் போலிசிடம் புகாரளித்துள்ளார்.
இதனிடையே, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், உடனே அதிகாரிகளிடம் சரிபார்க்கவும். ஆன்லைன் மோசடிகள் பெருகிவிட்டன, மேலும் குற்றவாளிகள் புதிய மற்றும் நவீன முறைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர், எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.