புது டில்லி,பிப் 25 – தேநீர் சுவைத்துக் கொண்டிருந்தபோது, அந்த தேநீர் இருந்த கண்ணாடி குவளையையும் சேர்த்து தவறுதலாக விழுங்கி விட்டதாக இந்தியாவில் ஆடவர் ஒருவர் கூறியிருப்பது , மருத்துவர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
எப்படி அந்த குவளை, உடலுக்குள் செல்ல முடியும் என மருத்துவர்களுக்கும் இன்னும் பதில் கிடைக்காத நிலையில், 55 வயதான அந்த ஆடவரின் வயிற்றுப் பகுதியிலிருந்து, அறுவை சிகிச்சை செய்து அந்த குவளையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.