புது டில்லி, மார்ச் 2 – புளுடூத் கருவியைக் கொண்டு தேர்வின் போது ஏமாற்ற முயன்ற , மருத்துவ உயர்கல்வி கூட மாணவர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் பயிலும் அந்த மாணவர் , கடந்த சில ஆண்டுகளாக கடைசி தேர்வில் பலமுறை தோல்வி கண்டு வந்துள்ளார்.
அந்த அழுத்தம் காரணமாக , அந்த மாணவர் அறுவை சிகிச்சையின் மூலமாக புளுடூத் கருவியை காதிற்குள் வைத்து தைத்துள்ளார்.
தேர்வின் போது அந்த மாணவரின் காற்சட்டைக்குள் கைபேசி மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, சந்தேகத்தில் அந்த மாணவரை ,தேர்வு அதிகாரி சோதனையிட்டிருக்கிறார். அதையடுத்து அந்த மாணவரின் ஏமாற்றுச் செயல் தெரிய வந்தது.