Latestஉலகம்

பல்குத்தும் குச்சிகளை பொரித்து உண்ணும் தென்கொரியர்கள்; அரசு எச்சரிக்கை

தென்கொரிய, ஜன 29 – தென்கொரியர்களிடையே திடீரென வைரலான பல்குத்தும் குச்சிகளை பொரித்து சாப்பிடும் உணவுப் பழக்கத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாப்பிட்டு முடித்ததும், பல்லிடுக்கில் சிக்கியதை வெளியில் எடுப்பதற்கு பயன்படும் பல்குத்தும் குச்சிகளை தென்கொரியர்கள் தற்போது விருப்பமான உணவாக மாற்றி இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பலரும் பல்குத்தும் குச்சிகளை பொரித்து மசால் தூள்களை சேர்த்து முறுக் என கடித்து சுவைக்கும் படங்களையும் வீடியோக்களையும் டிக் டாக்கில் பதிவேற்ற ஆரம்பித்துள்ளனர்.

இந்த புதிய ட்ரெண்டிங் எல்லை மீறியதில் தென்கொரிய உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“பல்குத்தும் குச்சி ஓர் உணவாக பரிந்துரை செய்ய உகந்தது அல்ல. அதில் சேர்க்கப்பட்டிருக்கும் வண்ணங்களும் ரசாயனங்களும் உடலில் சேர்வது ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே தயவுசெய்து “toothpicks” வறுத்து சாப்பிடுவதை நிறுத்தவும்” என பகிரங்கமாக அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!