சென்னை, ஏப் 18 – தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர் என நெஞ்சு வலிக்கு உள்ளானதால் நடிகர் மன்சூர் அலிகான் சென்னையிலுள்ள கே.கே நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாளை ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருகிறது. இந்த தேர்தலில் வேலுர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான் குடியாத்தாம் பகுதியில் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டமான நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த தேர்தலில் 50,000 முதல் ஒரு லட்சம் வாக்குகள்வரை தாம் வெற்றிபெறுவேன் என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறிய அவர் , தாம் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரானவன் என்ற கருத்தையும் அழுத்தம் திருத்தமாகவும் பதிவு செய்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிக்கு உள்ளானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.