ஜோகூர் பாரு, பிப் 28 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டாவது நாளிலேயே Bukit Batu தொகுதியில் போட்டியிடும் PKR வேட்பாளர் Arthur Chiong Sen Sern நேற்று கோவிட் தொற்றுக்கு உள்ளானார். சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி Arthur Chiong தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அனைவரின் நலனைக் கருதி தினந்தோறும் தாம் சுய பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் நேற்றைய பரிசோதனையில் தமக்கு கோவிட் இருப்பது தெரியவந்தாக Arthu Chiong வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Arthur Chiong குடன், தேசிய முன்னணியின் சார்பில் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். சுப்பையா, வாரிசான் கட்சியின் Lee ming Wen, Perikatan Nasional சார்பில் Tan Heng Choon ஆகிய நால்வர் Bukit Batu தொகுதியில் போட்டியிடுகின்றனர்.