
வாஷிங்டன், ஆகஸ்ட்டு 25 – 2017 அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
எனினும், மோசடி வாயிலாக வெற்றி பெற்றதாக, டிரம்ப் ஆட்சியில் இருந்த போதே ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதோடு, 2020-ஆம் ஆண்டு, ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போதும், மோசடி செய்ததாகவும் டிரம்ப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உட்பட 18 பேர் மீது மோசடி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஜார்ஜியாவிலுள்ள, அட்லாண்டா கோர்ட்டில் நடைபெற்று வரும் வேளை ; அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருசேர விசாரிக்க ஏதுவாக கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில், உள்நாட்டு நேரப்படி, 24-ஆம் தேதி இரவு மணி ஏழு வாக்கில், அட்லாண்டா சிறையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 77 வயது டிரம்ப் சரணடைந்தார்.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் கைதுச் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு நிலைமை பரபரப்பாக காணப்பட்டது.
எனினும், சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே சிறையில் இருந்த டிரம்ப், அதன் பின்னர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.