பத்து பஹாட், மார்ச் 5 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னரே அவர்களில் ஒருவர் ஜோகூர் மந்திரிபுசாராக பெயர் குறிப்பிடப்படுவார்.
எனவே இப்போதைக்கு தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து மட்டுமே ஜோகூர் பக்காத்தான் ஹராப்பான் கவனம் செலுத்தும் என அதன் ஜோகூர் மாநில தலைவர் Aminolhuda Hassan தெரிவித்தார்.
ஜோகூர் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த வேளையில் முக்கியமாக தேர்தல் பணிகளில் மட்டுமே பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.