
கோலாலம்பூர், நவ 1 – இன்று தேசிய முன்னணி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ம.இ.கா வேட்பாளர்கள் அதில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக அறியப்படுகிறது.
ம.இ.கா வருகின்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி நிற்க வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். அம்னோவுடன் ஏற்பட்ட முரண்பாடே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து விவாதிக்க கட்சியின் அவசர செயலவை கூட்டம் நாளை காலை 10.00 மணிக்கு கூட்டப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
வணக்கம் மலேசியா கட்சியின் தலைவரை தொடர்புக் கொள்ள முயற்சித்து வருகிறது.