
கோலாலம்பூர், மே 11 – கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் தமிழக பேச்சாளர்கள் பங்கேற்கும் இன்னிசை பாட்டு மன்றம் நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை மே 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான மண்டபத்தில் நடைபெறும். இந்த பாட்டு மன்ற நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மக்கள் மனங்களில் அதிகம் கவர்ந்தது காதல் பாடல்களா? தத்துவ பாடல்களா?
பத்தி பாடல்களா? என்ற தலைப்பில் பாட்டு மன்றம் நடைபெறவிருக்கிறது. தொலைக்காட்சி புகழ் செந்தமிழ் அருவி டாக்டர் திரு கலக்கல் கங்கேயன் நடுவராக பணியாற்றும் இந்த நிகழ்வில் அரக்காணம் கணேஷ், பாண்டிச்சேரி கவிஞர் உமா, கவிஞர் மதன், நாட்டுப்புற நாயகி கவிஞர் உமா அமர்நாத் ஆகியோர் பங்கேற்கவிருக்கின்றனர்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ம.இ.காவின் துணைத்தலைவரும் மனித வளத்துறையின் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனும் கலந்தகொள்கிறார். எனவே இந்த நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு டான்ஸ்ரீ நடராஜா
அழைப்பு விடுத்துள்ளார்.