Latestமலேசியா

தேவாலயத்தை சுற்றிப் பார்க்கும் நிகழ்ச்சி ; போலீஸ் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 19 – இளைஞர் விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் செயல்படும் அரசாங்க சார்பற்ற அமைப்பான Impact Malaysia ஏற்பாடு செய்திருந்த ‘ தேவாலயத்தை சுற்றிப் பார்க்கும்’ நிகழ்ச்சி தொடர்பில் போலிசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளார்கள் நேற்று ரத்து செய்திருந்தாலும், அதன் தொடர்பில் செந்தூல் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் பெறப்பட்ட புகாரை அடுத்து , விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் (Datuk Azmi Abu Kassim ) தெரிவித்தார்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சி சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய, இந்நிகழ்ச்சி முஸ்லீம்களை உட்படுத்தியிருக்கவில்லை என இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ இதற்கு முன்பு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!