Latestமலேசியா

தேவைப்படும்போது நஜீப்பை குற்றவாளி என்றுத்தான் சொல்வேன் – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், பிப் 28 – தேவையேற்படும்போது நஜீப் ரசாக்கை தாம் தொடர்ந்து குற்றவாளி என்றே கூறப்போவதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார். குற்றம் செய்துவிட்டு அதுகுறித்து வெட்கப்படாமல் இருப்பது மக்களின் வாழ்க்கைப் பண்புகளுக்கு எதிரானதாகும்.

இப்டிப்பட்டவர்கள் தங்களது தவறை உணராவிட்டால் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவார்கள். நான் மட்டும் அல்ல, நாடு முழுவதிலும், ஏன் உலகம் முழுமையும்கூட பலர் தங்களது புத்தகங்களிலும், எழுத்து படைப்புகளிலும், உரையாற்றும்போதும் நஜீப்பை குற்றவாளி என்றுத்தான் கூறுகின்றனர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் கூட இப்படித்தான் தெரிவிக்கின்றன என முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!