ஜோகூர் பாரு, பிப் 22 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்படும்.
வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்பதோடு அவர்களில் பலர் புதுமுகங்கள் என ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ Hasni Mohamad அறிவித்தார்.