தைப்பிங், டிசம்பர்-16, பேராக், தைப்பிங்கில் உள்ள மருந்தகமொன்றை ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட நான்கே மணி நேரங்களில், சந்தேக நபரான உள்ளூர் ஆடவன் பிடிபட்டான்.
20 வயது அவ்விளைஞன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதானதாக, தைப்பிங் போலீஸ் தலைவர் ACP மொஹமட் நாசிர் இஸ்மாயில் (Mohamad Nasir Ismail) கூறினார்.
கொள்ளையின் போது அவன் பயன்படுத்திய கத்தி, கொள்ளையிட்டதில் அவன் செலவு செய்தது போக எஞ்சியப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் மருந்தகப் பணியாளரான 28 வயது பெண்ணை நெருங்கி, கத்தியைக் காட்டி கல்லாப்பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளான்.
பயந்துபோய், அதிலிருந்த 300 ரிங்கிட் ரொக்கத்தையும் அப்பெண் கொடுத்து விட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஏற்கனவே 2 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அந்நபர் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை வரைத் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.