Latestஉலகம்

ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக அனுமதிக்க மாட்டேன் – போனி கபூர்

மும்பை, ஏப்ரல் 4 – சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி.

பின்பு கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏறக்குறைய 269 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், துபாயில் அமைந்துள்ள ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து மரணமடைந்த ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது.

இந்நிலையில், இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர்.

இது தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என கூறியுள்ளார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!