
கோலாலம்பூர், பிப் 13 – எதிர்வரும் 5 ஆம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிலங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தலம் , கெர்லிங் அருள்மிகு சுப்ரமணியம் ஆலயம், கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் ஆகியவற்றில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பத்துமலை வளாக தொழில்மய பகுதியில் தைப்பூசத்திற்கு முதல் நாள் பிப்ரவரி 4ஆம் தேதி சனிக்கிழமை சிலாங்கூர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும் . அந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் உறுதிப்படுத்தினார்.
சமய மற்றும் பல்வேறு கலச்சார படைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 10 முதல் 30 ஆலயங்களின் பிரதிநிதிகளிடம் மந்திரிபுசார் சிலாங்கூர் அரசாங்கத்தின் மான்யங்களை வழங்கவிருக்கிறார். மேலும் மாநில அரசினால் அமைக்கப்படும் சிறப்பு கூடாரங்களில் மாலை 6 மணி முதல் நள்ளிரவுவரை சுமார் 10,000 பக்தர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும்.
கெர்லிங் சுப்ரமணியர் ஆலயத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை சிலாங்கூர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பூச கொண்டாட்ட சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச தினத்தன்று கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் காலை 8 மணி முதல் பிற்பல் ஒரு மணிவரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிலங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. .