
கோலாலம்பூர், பிப் – ஜோகூரிலுள்ள முஸ்லீம்கள் தைப்பூச ரத ஊர்வலத்திலும், பொங்கல் பண்டிகையிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றம் வெளியிட்டிருக்கும் Fatwa எனப்படும் புதிய சட்ட பரிந்துரையில் அந்த தடை இடம்பெற்றிருப்பதாக, மாநில Mufti, Yahya Ahmad கூறியிருப்பதாக உள்ளூர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துக்கள் வரவேற்கும் அந்த இரு விழாக்களும், சமய சடங்குகளுடன் தொடர்புடையவையாக, fatwa-வின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விழாக்கான கொண்டாட்டங்கள் வழிபாட்டுத் தளங்களில் நடத்தப்பட்டால் அவை fatwa -வின் கீழ் அடங்குமென Yahya Ahmad தெரிவித்தார்.
எனினும் முஸ்லீம் அல்லாதவர்கள், வழிபாட்டுத் தளங்களுக்கு வெளியே நடத்தும் சமயம் சாராத நிகழ்ச்சிகளான பொது உபசரிப்பு, இரவு விருந்துபசரிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளலாம்.
அதோடு, முஸ்லீம் அல்லாதவர்களின் இறுதி அஞ்சலியில் முஸ்லீம்கள் கலந்து கொள்வதில்லை பிரச்சனையில்லை. ஆனால் இறுதி நல்லடக்க சடங்குகளில் அவர்கள் பங்கேற்கக் கூடாது.
முஸ்லீம்கள் , இஸ்லாமிய சமயத்தின் படி எதைச் செய்யலாம் செய்யக் கூடாது என விளக்குவதற்காக , ஜோகூர் சமய அதிகாரத்துவ தரப்பு நேற்று Fatwa-சட்ட பரிந்துரையை வெளியிட்டிருந்தது.