Latestமலேசியா

தைப்பூச SOP-களில் தளர்வு வேண்டும்; பத்துமலை ஆலய தேவஸ்தானம் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 15 – தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய முருகன் திருத்தலமான பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கென அரசாங்கம் நிர்ணயித்திற்கும் SOP -கள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யக் கோரி, ஆலய தேவஸ்தானம் முறையீடு செய்திருப்பாக, ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ ஆர் நடராஜா தெரிவித்தார்.

வழிபாட்டு நேர கட்டுப்பாடு, பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு போன்ற SOP விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக கடினம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் கூறினார்.

இதனிடையே, இம்முறை காவடிகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், தைப்பூச தினத்திற்குப் பிறகு மக்கள் காவடிகள் எடுப்பதை பத்துமலை ஆலய தரப்பு தடுக்காது.

அத்துடன் , தலைநகர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் புறப்படும்போது, பக்தர்கள் சாலை நெடுகே இரு மருங்கிலும் கூடி முருகனின் ஆசியைப் பெற முடியும். ரதத்துடன் உடன்வரவே பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, டான் ஶ்ரீ ஆர் நடராஜா கூறினார்.

இதனிடையே, மொத்தம் 10 நிறுத்தங்களில் ரதம் நிற்கும்போது, சாலையின் இரு மருங்கிலும் ஆலய தரப்பு அமைத்திருக்கும் கூடாரங்களில் திரண்டு மக்கள் அர்ச்சனை செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு வரும் பக்தர்களை ஆலய தரப்பு எந்நேரமும் வரவேற்கும். ஆலயம் குறிப்பிட்ட நேரத்துடன் மூடப்படாது என டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

அரசாங்கம் அறிவித்த தைப்பூச SOP- களில் ஆலய தேவஸ்தானம் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தங்களின் நியாயமான சில கோரிக்கைகளை அரசாங்கம் செவிசாய்க்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!