
கோலாலம்பூர், ஜன 5 – ஜனவரி 15-ஆம் தேதி, தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரத்தை மலேசிய இந்து சங்கம் வெளியிட்டது.
காலை 7.26 மணி முதல் 11.26 மணி வரையிலும் , மாலையில் பொங்கல் வைக்க விரும்புவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது மாலை 7 மணிக்கு மேல் பொங்கல் வைக்கலாம் .
இருப்பினும், காலை வேலையில் பொங்கல் வைப்பதே உத்தமம் என அச்சங்கம் குறிப்பிட்டது.