
கோலாலம்பூர், ஏப் 29 – தைவானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளை மலேசிய போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Acryl Sani Abdullah Sani தெரிவித்துள்ளார். தைவானினிலிருந்து விமானத்தின் மூலம் ஏப்ரல் 20 ஆம்தேதி நாட்டிற்குள் புகுந்த அந்த இரண்டு நபர்களையும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக அவர் கூறினார். அந்த இரண்டு நபர்களும் தைவான் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களாவர். அவர்கள் தைவான் குண்டர் கும்பல் மற்றும் இணைய மோசடி கும்பலை சேர்ந்த சந்தேகப் பேர்வழிகள் என்றும் தெரியவருவதாக Acryl Sani வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.