Latestமலேசியா

தைவான் நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகியது

தைப்பே, ஏப் 4 – தைவானின் கிழக்கு பகுதியில் ரெக்டர் கருவியில் 7.2அளவில் பதிவான நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. அந்த பேரிடரில் 9 பேர் மரணம் அடைந்துள்ளதோடு தேசிய பூங்காவில் ஹோட்டலுக்கு சென்றுகொண்டிருந்த 42 தொழிலாளர்கள் இன்னமும் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் ஏற்பட்ட அந்த நில நடுக்கம் 25ஆண்டுகளில் மிகவும் கடுமையாக இருந்ததாக வருணிக்கப்படுகிறது. காலையில் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் மக்கள் வேலைக்கும் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட Hualien வட்டாரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தைவான் தலைநகர் தைப்பே நகரில் பல கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டது. எனினும் அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. Hualien நகரில் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியோர் முழுமையாக மீட்கப்பட்டனர். இதனிடையே பலர் தங்களது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு தூங்காமல் பொது இடங்களில் கூடாரங்களை அமைத்து தூங்கினர். நில நடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகள் தைவானில் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதோடு அடுக்குமாடி வீடுகளில் தொடர்ந்து தங்குவதற்கு அஞ்சுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!