Latestமலேசியா

தொகுதி பங்கீடு பேச்சுக்களை விரைந்து நடத்துவீர் பினாங்கு பி.கே.ஆருக்கு அன்வார் வலியுறுத்து

ஜோர்ஜ் டவுன், ஆக 12 – 15 ஆவது பொதுத் தேர்தலுக்காக பினாங்கில் தொகுதி பங்கீடு குறித்து விரைந்து பேச்சு நடத்தும்படி பினாங்கு பி.கே.ஆர் தலைமைத்துவத்திற்கு அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த வாரம் பக்காத்தான் தலைவர் மன்றம் கூடவிருப்பதால் தொகுதி பங்கீடு குறித்து சாத்தியமான விரைவில் பேச்சு நடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். தீபகற்ப மலேசியாவில் குறிப்பிடத்தக்க மாநிலங்களில் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிகைகளுக்கு தலைமையேற்கும்படி பி.கே.ஆர் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர்களுக்கு அன்வார் பணித்துள்ளார். கெடா, பெர்லீஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கான பி.கே.ஆர் தலைவராக கட்சியின் உதவித்தலைவரான நுருல் இசாவை அன்வார் நியமித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!