Latest

தொடரும் மீட்சி: 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக 4.14 புள்ளிகளைத் தொட்ட ரிங்கிட்டின் மதிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-25 – ரிங்கிட்டின் தொடர்ந்து மீட்சி கண்டு வருகிறது.

அவ்வகையில் 2021 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக ரிங்கிட்டின் மதிப்பு 4.14 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை பரிவர்த்தனையின் போது ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.1490-மாகப் பதிவாகியது.

நேற்றையப் பரிவர்த்தனை முடிவில் அதன் மதிப்பு 4.1550-தாக பதிவானது.

எதிர்பார்த்ததை விட சிறந்த உள்ளூர் பொருளாதார தரவுகள் மற்றும் அமெரிக்காவின் அண்மைய வட்டி விகிதக் குறைப்பும் இதற்குக் காரணமாக இருந்திருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு கட்டத்தில் அதலபாதாளத்தில் 4.7-ழாக வீழ்ச்சிக் கண்ட ரிங்கிட்டின் இந்த தொடர் மீட்சி, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் சுறுசுறுப்பாக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!