தொடர்பு, இலக்கவியல் துணையமைச்சரின் தைப்பூச வாழ்த்துச் செய்தி

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள், ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள முருகன் திருத்தலங்களில் ஒன்றுகூடும் நிலையில், இன்று தைப்பூசம் மலேசியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் ஒரு திருவிழாவாகவும் மாறியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இத்தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு.
மலேசியர்கள் குறிப்பாக இந்துக்கள் இந்த புனித நாளை பக்தி நெறியுடன் கொண்டாடி எல்லா நிலையிலும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி பெறுவோம் என்பதை தைப்பூசம் போதிக்கிறது. ஒற்றுமை மலேசியாவின் இலக்கும் அதுதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தைப்பூசத் திருநாளில், மலேசியர்களின் வாழ்வில் இறை அருள் ஒளியேற்றட்டும். தைப்பூசம் பக்திநெறி மிக்க; அனைவருக்கும் சீரும் சிறப்பையும் கொண்டு வரும் நாளாக அமையட்டும்!
அன்புடன்,
தியோ நீ சிங்
தொடர்பு,இலக்கவியல் துணையமைச்சர்