
கோலாலம்பூர், ஜூன் 30 – தனது தொடர்பு சேவை தடைப்பட்டிருப்பதாவும் அதனை சரிபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெக்சிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்பு செயல் இழந்ததற்கான காரணத்தை கண்டறியும் பணியில் எங்களது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தியமான விரைவில் இந்த பிரச்சனை விரைந்து சரி செய்யப்படும் என மெக்சிஸ் தெரிவித்துள்ளது. நிலைமையை புரிந்துகொண்டு பொறுமையை காத்துவரும் பயனீட்டாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மெக்சிஸ் தனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டது. தொழிற்நுட்ப கோளாறினால் தனது பயனீட்டாளர்கள் பலர் மெக்சிஸ் தொடர்பு சேவையை பெற முடியாத சூழ்நிலைக்கு இன்று உள்ளாகினர், கைதொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு நடமாடும் தரவுக்கான இணையச் சேவையையும் பெறமுடியாமல் மெக்சிஸ் பயனீட்டாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.