லங்காவி, ஆகஸ்ட் 23 – இன்று பெய்த கனத்த மழையின் காரணமாக, தெலகா துஜூ நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியுள்ளது.
இதனால் லங்காவி கேபிள் கார் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் சேதமடைந்துள்ள நிலையில், ஒரு வாகனம் வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டுள்ளது.
அடித்துச் செல்லப்பட்ட மைவி ராக வாகனம், பின்னர் ஆற்றில் கண்டெக்கப்பட்டது.
இதனிடையே, எட்டு உணவு கடைகள், ஐந்து கியோசிக் (kiosk) மற்றும் ஐந்து துணிக்கடைகளும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
எனினும், இதுவரை உயிர்சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று மதியம் 2 மணியளவில் மழை நின்று, 2.40 மணியளவில் தண்ணீர் முற்றிலும் குறைந்துவிட்டது என லங்காவி மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கைருல் அப்சான் முகமட் யாசின் (Kapt Khairul Afzan Md Yasin) கூறியுள்ளார்.