
மணிலா, ஜூன் 3 – காணாமல் போன 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு துணி துவைக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிலிபினா, மணிலாவில் கடந்த வெள்ளிக்கிழமை 15 வயது உறவுக்கார இளைஞனின் கண்காணிப்பில் விடப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். எங்கு தேடியும் கிடைக்காதபோது, சிறுவன் காணவில்லை என போலிசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, அந்த இளைஞனின் அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததைக் கண்டு அவனது தாயார் அங்கு இருந்த பயன்படுத்தாத துணி துவைக்கும் இயந்திரத்தில் எட்டி பார்த்ததில் காணாமல் போன சிறுவனின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக போலிசுக்கு தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்த போலிசார் அந்த இளைஞனை கைது செய்தனர்.
விசாரணையில், அந்த உறவுக்கார இளைஞன் 1978லிருந்து 1091ஆம் ஆண்டு வரை அமெரிக்காவைச் சேர்ந்த தொடர் கொலையாளி ‘Jeffrey Dahmer’ரின் கதைகளால் ஈர்க்கப்பட்டு இந்த கொலையை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, தனது பேரனை கொலை செய்த அந்த இளைஞனுக்கு தக்கத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என இறந்த சிறுவனின் தாத்தா கூறியுள்ளார்.
அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயார், பிள்ளைகள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் படிக்கிறார்கள் என்பதை பெற்றோர்களாகிய நாம் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.